சென்னை:கோலமாவு கோகிலா படத்தில் நடிகை நயன்தாராவிற்கு தந்தையாக நடிகர் குணசித்திர நடிகர் ஆர்.எஸ். சாரதி காலமானார். அவருக்கு 66 வயது. பழம்பெரும் தயாரிப்பாளர் ஆர்.எஸ். சந்தானத்தின் மகனும், நடிகர் சந்தான பாரதியின் சகோதரருமான நடிகர் ஆர்.எஸ். சிவாஜி, தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 1981இல் தனது சகோதரர் சந்தான பாரதி இயக்கிய பன்னீர் புஷ்பங்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் விக்ரம், சத்யா, அபூர்வ சகோதரர்கள், மாப்பிள்ளை, மைக்கெல் மதன காமராஜன், குணா, பூவே உனக்காக, குட்டி என பல்வேறு படங்களில் நடித்தார். நடிகர் கமல்ஹாசன் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
குறிப்பாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடிகர் ஜனகராஜுடன் காமெடி காட்சிகளில் ‘சார் நீங்க எங்கேயோ போய்ட்டிங்க’ என்ற வசனம் மிகவும் பிரபலமடைந்தது. இயக்குநர் நெல்சன் இயக்கிய ’கோலமாவு கோகிலா’ படத்தில் காமெடி கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார். கடந்த 2022இல் சாய் பல்லவி நடித்து வெளியான ‘கார்கி’ திரைப்படத்தில் ஆர்.எஸ்.சிவாஜியின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.