நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வில்லனாக யார் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது அரவிந்த் சாமி, அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தில் வில்லனாக நடிகர் அரவிந்த் சாமி இதுகுறித்து விக்னேஷ் சிவன் அரவிந்த்சாமியிடம் பேசி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன் அரவிந்த்சாமி நடித்த பாசப் பறவைகள் படத்தில் அஜித் நடித்திருந்தார். இப்படம் 1994ம் ஆண்டு வெளியாகியிருந்தது. கிட்டத்தட்ட 29ம் ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மங்காத்தா படத்தில் இருவரும் இணைந்து நடிக்க வேண்டியதாக இருந்த நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் சந்தானமும் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. காமெடி வேடமா அல்லது வேறு எதாவது கதாபாத்திரமா என்பது தெரியவில்லை. இந்த தகவல் அஜித் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பொங்கல் முடிந்து தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:நடிகர் தனுஷ் போலி ஆவண வழக்கு: மேலூர் கதிரேசன் தரப்பில் சீராய்வு மனு தாக்கல்!