தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'பொறாமை, வெறுப்பு இல்லாமல் இருங்கள்' - ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்! - அஜித்தின் மேலாளர் அஜித் அனுப்பிய மேசேஜை

நடிகர் அஜித் அவரது ரசிகர்களுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் அட்வைஸ் மெசேஜை அவரது மேலாளர் சமூக வலைதளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து அஜித்தின் ரசிகர்கள் இதனை வேகமாகப் பரப்பி வருகின்றனர்.

Etv Bharat‘பொறாமை வெறுப்பு இல்லாமல் இருங்கள்’ - ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்
Etv Bharat‘பொறாமை வெறுப்பு இல்லாமல் இருங்கள்’ - ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்

By

Published : Nov 17, 2022, 4:34 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், அஜித் குமார். ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் திரையரங்குகள் திருவிழாவாக மாறிவிடும். இவரது நடிப்பில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு 'துணிவு' படம் வெளியாகவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இல்லாத இவரை வெள்ளித்திரையில் மட்டுமே காண முடியும். ஆனால், தற்போது இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நிறைந்து காணப்படுகிறது. மேலும் தனது திரைப்படத்தின் விளம்பர புரொமோஷனில் கலந்துகொள்ள மாட்டார்‌. நல்ல படத்திற்கு விளம்பரங்கள் தேவை இல்லை என்பது அஜித்தின் பாலிசி.

இந்நிலையில் அஜித்தின் மேலாளர் அஜித் அனுப்பிய மெசேஜை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்‌. அதில், 'உங்களைச் சிறப்பாகச் செயல்பட செய்யத்தூண்டும் நபர்களை உங்களைச் சுற்றி வைத்துக்கொள்ளுங்கள். நாடகமோ எதிர்மறையோ இல்லாமல், உயர்ந்த இலக்குகள் மற்றும் அதிக உந்துதலுடன், நல்ல நேரம் மற்றும் நேர்மறை ஆற்றலுடன் பொறாமையோ வெறுப்போ இல்லாமல் ஒருவருக்கொருவர் முழுமையான சிறந்ததை வெளியே கொண்டு வர வேண்டும். வாழு... வாழ விடு, நிபந்தனையற்ற அன்புடன் அஜித்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அஜித்தின் அறிவுரை

இதையும் படிங்க:யுவனை திட்டினேனா? - பதறிய பிரதீப் ரங்கநாதன்

ABOUT THE AUTHOR

...view details