தமிழ்நாடு

tamil nadu

பாலக்காடு பகவதி அம்மன் கோயிலில் அஜித் குமார் தரிசனம்!

By

Published : Mar 31, 2022, 1:38 PM IST

Updated : Mar 31, 2022, 3:58 PM IST

கேரளாவில் உள்ள பாலக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடிகர் அஜித் குமார் சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

பக்தி மோடில் நடிகர் அஜித் குமார்!
பக்தி மோடில் நடிகர் அஜித் குமார்!

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர்.

இவர், 'வலிமை' திரைப்படத்தை தொடர்ந்து, போனிகபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையமைப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் தனது 61ஆவது படத்தில் நடிக்கவுள்ளார்.

சாமி சரிசனத்தில் அஜித்

இந்தப் படம் அடுத்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இப்படத்திற்கான அதிக காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதற்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக கேரளாவில் உள்ள பாலக்காடு பகவதி அம்மன் கோயிலில் அஜித் குமார், சாமி தரிசனம் செய்தார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: ''லேட் தான்... ஆனா இன்னைக்கு இதுதான் ஹாட்': பீஸ்ட் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!'

Last Updated : Mar 31, 2022, 3:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details