தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகர் அஜித்தின் பைக் சுற்றுப் பயண நிறுவனத்தின் பெயர் மாற்றம்.. காரணம் என்ன? - ajith bike ride company tariff

Actor Ajithkumar: நடிகர் அஜித்தின் AK MotoRide நிறுவனத்தின் பெயர் 'வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்
வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 5:31 PM IST

சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பு தவிர பைக் ரேஸில் அதிக ஆர்வர் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கடந்த சில மாதங்களாக தனது பைக்கில் உலக சுற்றுலா சென்று வருகிறார். இந்நிலையில் அஜித்குமார் 'ஏகே மோட்டோ ரைடு' என்ற புதிய பைக் சுற்றுப்பயண நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் AK MotoRide என்ற தனது நிறுவனத்தின் பெயரை 'வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்' என மாற்றம் செய்துள்ளது. எனவே இனி வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் என்ற பெயரில் பைக் சுற்றுலா நிறுவனத்தை அஜித் நடத்த உள்ளார்.

பெயர் மாற்றம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "முதற்கட்டமாக ராஜஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, நியூசிலாந்து நாடுகளுக்கு மோடார் சைக்கிளில் சுற்றுப்பயணம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 23ஆம் தேதிக்குள் அதற்கான பயணம் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள வாகன ஓட்டிகள், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு இந்நிறுவனம் சுற்றுப்பயணங்களை வழங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் "முதல் இருசக்கர வாகன சுற்றுலா ஐக்கிய அரபு எமிரெட்ஸ் மற்றும் ஓமன் நாட்டு வழித்தடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுபவமில்லாத வாகன ஓட்டிகளாலும் இந்த அழகான மலைப்பாங்கான பகுதியை எளிதில் கடக்க முடியும்" என கூறப்பட்டுள்ளது

நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படப்பிடிப்பு 2 நாட்களுக்கு முன்பு அசர்பைஜானின் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. த்ரிஷா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதையும் படிங்க: இந்த வார ரேஸில் 9 படங்கள்.. உங்களின் சாய்ஸ் என்ன?

ABOUT THE AUTHOR

...view details