இயக்குனர் ஹெச் வினோத்துடன் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் அஜித் குமார், சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு தனது நண்பர்களுடன் ஐரோப்பாவில் சாலைப் பயணம் சென்றுள்ளார்.
ஏற்கனவே அஜித் பி.எம்.டபுள்யூ(BMW) பைக்கில் பயணம் செய்யும் படங்கள் சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வரிசையில் அஜித் தனது நண்பர்களுடன் பைக்கிற்கு பெட்ரோல் போட்டு கொண்டு பயணம் செய்யும் மேலும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.