தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தொடங்கிய அஜித்தின் 'AK61' திரைப்பட படப்பிடிப்பு! - அஜித்தின் ’AK61’ திரைப்பட படப்பிடிப்பு தொடங்கியது

நடிகர் அஜித் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் 'AK61' தொடங்கியுள்ளது.

’என் படம் மிஷ்கினின் ’சைக்கோ’-வை விட சிறந்த படம்’ - ஏவிஎம் வாரிசு
’என் படம் மிஷ்கினின் ’சைக்கோ’-வை விட சிறந்த படம்’ - ஏவிஎம் வாரிசு

By

Published : Apr 11, 2022, 10:26 PM IST

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ‘வலிமை’. இப்படத்தில் கார்த்திகேயா, ஹீமா குரேஷி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் குறையவில்லை. இப்படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன், மற்றும் ஜிப்ரான் இசை சேர்த்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு மக்களிடமும், விமர்சகர்களிடமும் கலவையான விமர்சனம் கிடைத்தது.

இந்நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைகிறது. இதற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(ஏப்.11) ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அஜித் பங்கேற்ற வங்கி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும். இந்நிலையில் #Ak61starstoday என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

இதையும் படிங்க: 'பீஸ்ட்' படக்குழுவினரை தன் 'ரோல்ஸ் ராய்ஸ்' காரில் அழைத்துச்சென்ற நடிகர் விஜய்!

ABOUT THE AUTHOR

...view details