தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் அஜித் முக்கியாமனவர் ஆவார். அஜித்தின் ரசிகர்கள் அவர் என்ன செய்தாலும் ட்ரெண்டாக்குவது வழக்கம்.
முன்னதாக அஜித்தின் 'வலிமை' படத்தின் அப்டேட் கேட்டு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் முதல் உள்நாட்டு அரசியல்வாதி வரை அனைவரையும் அலறவிட்டார்கள். இந்த வரிசையில் தற்போது அஜித் பைக் ஒன்றிற்கு பெட்ரோல் போடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அஜித்திற்கென்று தனியாக ட்விட்டர் கணக்கு கிடைக்காது. அவரது மேலாளர் சுரேஷ் சந்திரனின் ட்விட்டர் பக்கத்தில் அஜித் குறித்த அப்டேட் பதிவுகளை பதிவிடுவது வழக்கம். அந்த வரிசையில் நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் அஜித் பெட்ரோல் போட்டோ ஒன்றைப் பகிர்ந்து AKவின் மோட்டார் சைக்கிள் டைரீஸ் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து இந்த புகைப்படத்தை ட்விட்டர் மற்றும் பிற சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டாக்கி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.
பைக்கிற்கு பெட்ரோல் போட்ட அஜித்- வைரலாகும் புகைப்படம்
இதையும் படிங்க:10 ஆண்டுகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் செய்த படம் 'விக்ரம்' தான்- கமல்ஹாசன்