பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர் நடிகர் பிரபாஸ். இவர் பான் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறார். அந்த வகையில், அவரது நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் திடைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.
பல்வேறு ட்ரோல்களுக்கும் உள்ளானது. இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் இன்று (அக். 23) தனது 43ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு ஆதிபுருஷ் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.