சென்னை: தனுஷ் நடித்த "வாத்தி" (vaathi) திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் வெங்கி அட்லூரி, நடிகர் ஷாரா, ஒளிப்பதிவாளர் யுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வாத்தி திரைப்படத்தின் வெற்றிக்கு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இயக்குனர் வெங்கி அட்லூரி கூறியது, என் மீது நம்பிக்கை வைத்த தனுஷுக்கு நன்றி. இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. இப்படம் 8 நாட்களில் ரூ.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதற்கு மேல் என்ன வேண்டும் என மகிழ்ச்சியுன் கூறினார். தனுஷுடன் பணியாற்றும் போது கச்சிதமாக வேலை செய்ய வேண்டும். பாத்துக்கலாம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. என்னை ஒரு நல்ல இயக்குனராக உருவாக்கினார். அவர் கடலளவு திறமை வாய்ந்தவர் என பெருமையாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், எனது பார்வையில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கும் கல்வி செல்ல வேண்டும். இந்தியாவில் கல்வி முறை சிறப்பாக உள்ளது. ஆனால் விலை உயர்ந்ததாக உள்ளது. அரசு பள்ளிகள் சிறப்பாக உள்ளன. வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளை நான் பெரிய அளவில் பார்த்ததில்லை. தென்னிந்திய பள்ளிகள் மீதுதான் எனக்கு அதிக ஆர்வம் உள்ளது. தமிழ்நாடு பற்றி எனக்கு அதிகம் தெரியாது. தமிழ்நாட்டில் உள்ள இட ஒதுக்கீடு சூழல் பற்றி எனக்கு தெரியாது.