தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பாரதிராஜா உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை - இயக்குநர் பாரதிராஜா

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாரதிராஜா உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை !
பாரதிராஜா உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை !

By

Published : Aug 30, 2022, 10:22 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாரதிராஜா, 16 வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில் உள்ளிட்ட படங்களின் மூலம் கிராமத்து வாசனையை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். இவர் இயக்கிய படங்களில் மண் வாசனை வீசும். தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 23ஆம்‌ தேதி சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வயது முதிர்வு காரணமாகவும் நீர்ச்சத்து குறைவு காரணமாகவும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனையில் கடந்த 26ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எம்ஜிஎம் தலைவர் டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இவரது உடல்நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாரதிராஜா உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவமனை அறிக்கை !

அதில், பாரதிராஜா உடல்நிலை சீராக இருப்பதாகவும்; சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவரை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'வெந்து தணிந்தது காடு' - ஆடியோ வெளியீட்டுக்குத் தயாராகும் அரங்கம்!

ABOUT THE AUTHOR

...view details