தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

90’s கிட்ஸ்களின் கனவு நாயகிகளின் ரீயூனியன்! - meena husband

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, ரம்பா, சங்கவி மற்றும் சங்கீதா ஆகியோர் வெகுநாட்களுக்குப் பின் சந்தித்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர்.

90s கிட்ஸ்களின் கனவு நாயகிகளின் ரீயூனியன்
90s கிட்ஸ்களின் கனவு நாயகிகளின் ரீயூனியன்

By

Published : Aug 10, 2022, 4:25 PM IST

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம்வந்த மீனா, ரம்பா, சங்கவி மற்றும் சங்கீதா ஆகியோர் சந்தித்து நட்புபாராட்டிக்கொண்டனர். இந்த புகைப்படத்தை நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை மீனாவின் அந்தப்பதிவில், நடிகைகள் ரம்பா, சங்கவி, சங்கீதா ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தையும், அவர்களின் மொத்த குடும்பத்துடனும் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இதனால் கடந்த ஒரு மாத காலமாக சமூக வலைதளங்களில் பெரிதளவு தன்னை காட்டிக்கொள்ளாத மீனா, தற்போது தான் மீண்டு(ம்) வரத்தொடங்கியுள்ளார்.

இதையும் படிங்க:'48 மணி நேரமாக தூங்கவில்லை' - 'லால் சிங் சத்தா' ரிலீஸ் குறித்து அமீர்கான்!

ABOUT THE AUTHOR

...view details