தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

25 years of suryavamsam- நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பாக்குது சிறகை விரித்து பறப்போம் - director vikraman

விக்ரமன் இயக்கத்தில் 25 வருடங்களுக்கு முன் வெளிவந்து 90’s கிட்ஸ்களின் ஆல் டைம் பேவரைட் படமான சூரியவம்சம் குறித்த சிறப்பு தொகுப்பு.

25 years of suryavamsam- நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பாக்குது சிறகை விரித்து பறப்போம்
25 years of suryavamsam- நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பாக்குது சிறகை விரித்து பறப்போம்

By

Published : Jun 27, 2022, 2:02 PM IST

Updated : Jun 27, 2022, 2:16 PM IST

சென்னை: சூர்யவம்சம் திரைப்படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை அத்திரைப்பட ரசிகர்கள் 25 years of suryavamsam என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

என்ற குடும்பத்துல எல்லாரும் வந்தாச்சு

விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த வெளியான திரைப்படம் சூர்யவம்சம். இதில் மணிவண்ணன், சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

1997ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. எஸ்.ஏ ராஜ்குமார் இசைப்பணிகளை மேற்கொண்டிருந்தார். சூர்யவம்சம் என்றதும் நம் நினைவுக்கு வருவது அதன் காமெடி காட்சிகள், பாடல்கள், சென்டிமென்ட் காட்சிகள் தான்.

மகாபிரபு நீங்க இங்க இருக்கீங்களா?

கலக்கல் காமெடி:சரத்குமார், சுந்தர்ராஜன் ஆகியோருடன் சேர்ந்து மணிவண்ணன் காமெடியில் கலக்கியிருப்பார். இதில் இடம்பெற்ற மகாபிரபு காமெடி காட்சிகள் இன்றளவும் மிகவும் பிரபலம்.

சென்டிமென்ட் சீன்களில் தமிழ்நாடு குடும்பங்களின் பேவரைட்

சென்டிமென்ட் காட்சிகள்:இப்படத்தில் இடம்பெற்ற சென்டிமென்ட் காட்சிகள் அதிகமாக பேமிலி ஆடியன்ஸை ஈர்த்தது. பெண்களின் பேராதரவு கிடைத்தது. இன்றும் டிவியில் எப்போது ஒளிபரப்பானாலும் சூர்யவம்சம் படத்தை சலிக்காமல் பார்க்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள்.

எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசை:இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இசை. எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைப்பில் பாடல்கள் எல்லாம் ஹிட். ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.. என முனு முனுக்காத வாய்கள் இல்லை. நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பார்க்குது பாடல் இன்றும் பலரது குடும்பப் போட்டோவுடன் ஸ்டேட்டஸாக வலம்வருகிறது.

இதையும் படிங்க:30 Years Of Annamalai: இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சி வச்சிக்கோ அசோக்!

Last Updated : Jun 27, 2022, 2:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details