ஐதராபாத் : 69வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா வரும் ஜனவரி 28ஆம் தேதி குஜராத்தில் நடைபெறுகிறது. ஒவ்வெரு ஆண்டும் இந்த மதிப்புமிகுந்த விழாவில் சிறந்த படங்கள், நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பு, கதை, சண்டை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.
இந்தி சினிமாவின் மதிப்புமிக்க மற்றும் பழமையான விருது விழாவான பிலிம்பேர் விருது விழாவின் 69வது பதிப்பு நடப்பாண்டில் வரும் 28ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. நடப்பாண்டின் பிலிம்பேர் விருது விழாவின் பரிந்துரை பட்டியலை அமைப்பின் நடுவர் குழு வெளியிட்டு உள்ளது.
சிறந்த நடிகருக்கான போட்டியில் ஷாருக்கான் இடம் பிடித்து உள்ளார. ஜவான் மற்றும் டங்கி ஆகிய இரண்டு படங்களுக்காக அவர் சிறந்த நடிகருக்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளார். அண்மையில் வெளியான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட 12த் பெயில் திரைப்படமும் பல்வேறு தேர்வுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.