தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வசூல் சாதனை புரிந்த ”சிவாஜி” திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு! - 15 years have passed since the release of the blockbuster movie Sivaji

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை புரிந்த சிவாஜி திரைப்படம் 15 ஆண்டுகள் நிறைவடைதையொட்டி , ரசிகர்கள் #15yearsofsivaji என்ற ஹாஸ்டேக்கை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

sivaji movie
சிவாஜி படம்

By

Published : Jun 15, 2022, 10:26 AM IST

கடந்த 2007ல் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம், பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து உலகளவில் வசூல் சாதனை புரிந்தது. வெளியான முதல் வாரத்திலேயே யு.கே டாப் 10 தரவரிசையில் இடம் பிடித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் பெற்றது.

கமர்ஷியல் படமாக வெளியான இத்திரைப்படம் எதிர்பார்த்த வசூலை விட பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிந்து ரஜினியின் சிறந்த படமாகவும் அமைந்தது. 60 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 150 கோடிக்கும் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 175 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய திரைப்படங்களில் சிவாஜியும் ஒன்று. இந்த நிலையில் ரசிகர்கள் டிவிட்டரில் #15yearsofsivaji என்ற ஹாஸ்டேக்கை டிரெண்ட் செய்து , படம் வெளியான போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். படத்திற்கு பாடல்கள் எழுதிய வைரமுத்துவும் 15yearsofsivaji தொடர்பாக டிவீட் செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details