தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மார்க் ஆண்டனி படம் வெற்றியா..? வீடியோ வெளியிட்டு விஷால் கூறியது என்ன? - kollywood updates

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் விஷால், ரசிகர்கள் மார்க் ஆண்டனி படத்திற்காக கொடுத்த ஒவ்வொரு டிக்கெட் பணத்தில் இருந்தும் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கூறி உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 1:52 PM IST

சென்னை: விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, உள்ளிட்ட பலர் நடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ள திரைப்படம் "மார்க் ஆண்டனி". நேற்று (செப். 15) திரையரங்குகளில் வெளியான மார்க் ஆண்டனி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். டைம் டிராவலை மையமாக கொண்டு பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மார்க் ஆண்டனி படத்தின் இடைவேளை காட்சி, கிளைமாக்ஸ் காட்சிகளில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பு வேற ரகம் எனவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஆதிக் ரவிச்சந்திரனின் முதல் படமான "த்ரிஷா இல்லனா நயன்தாரா" வெற்றி பெற்றது.

இதனையடுத்து அவர் சிம்புவை வைத்து இயக்கிய அன்பானவன், அசராதவன், அடங்காதவன் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் திரைப் பிரபலங்கள் கார்த்தி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்து படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் கதாநாயகன் விஷால் ரசிகர்கள் படத்திற்கு அளித்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து தனது X பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் "மார்க் ஆண்டனி நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வீடியோவில் பேசி உங்களுக்கு நன்றி தெரிவிப்பது என்னுடைய கடமை என தோன்றுகிறது.

நாங்கள் உழைத்துள்ளோம் என கூறினாலும் வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்கள் இந்த தெய்வங்கள் (ரசிகர்கள்), மேலே இருக்கும் தெய்வங்கள் ஆசீர்வாதம் இல்லாமல் வெற்றி பெற்றதில்லை. ரசிகர்கள் எங்களை பாராட்டி இந்த ப்ளாக்பஸ்டர் வெற்றி கொடுத்ததற்கு ரொம்ப நன்றி.

இந்த வெற்றியை மனதில் வைத்து அடுத்து நல்ல படத்தில் நடிப்பேன். மேலும் மார்க் ஆண்டனி படத்தை பாராட்டிய எனது சினிமா நண்பர்கள் கார்த்தி, சிம்பு, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோருக்கும் நன்றி. நான் யார் பெயராவது கூற மறந்தால் மன்னித்து விடுங்கள். ஒன்றரை வருடம் உழைத்ததற்கு பலன் கிடைத்துள்ளது என சந்தோஷமாக உள்ளது.

கண்டிப்பாக நான் முன்னர் கூறியது போல் நீங்கள் மார்க் ஆண்டனி படத்திற்காக கொடுத்த ஒவ்வொரு டிக்கெட் பணத்தில் இருந்தும் ஒரு ரூபாய் விவசாயிகளிடம் சேரும், நன்றி" என அந்த வீடியோவில் கூறி உள்ளார்.

இதையும் படிங்க: முற்றிலும் பொய்யே.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் ஆண்டனி!

ABOUT THE AUTHOR

...view details