நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். அதேபோல், விளாத்திகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரப்புரை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “ஸ்டெர்லைட் நச்சு ஆலையை விரிவு படுத்தக்கூடாது என்பதற்காக தான் இந்த தூத்துக்குடி மக்கள் அமையாதியாக போராடினார்கள். ஆனால், அந்த அப்பாவி மக்களை பழிவாங்கும் பொருட்டு அவர்களை அச்சுறுத்தவே அதிமுக அரசு அவர்களை சுட்டுக் கொலை செய்தனர். ஆகவே, இந்த கொலைகார அரசுகள் தூக்கி எறியப்பட வேண்டும்.