தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

'காஷ்மீருக்கு குடியேறும் பாகிஸ்தானியர்களுக்கு இந்தியக் குடியுரிமை' - மோடி உறுதி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடக்கும் பிரச்னைகளுக்கு காங்கிரஸும் அதன் அடாவடிக் கூட்டணிக் கட்சிகளும்தான் காரணம் என பிரதமர் நேரந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

காஷ்மீர் கத்துவாவில் பிரதமர் மோடி பேச்சு

By

Published : Apr 14, 2019, 6:20 PM IST

Updated : Apr 15, 2019, 3:41 PM IST

ஜம்மு காஷ்மீர் காத்துவா மாவட்டத்தில், பாஜகவின் பேரணியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில், இந்திர காந்தி இறப்புக்கு பின் அரசியம் காழ்ப்புணர்ச்சியால், 1984இல் நடத்தப்பட்ட சீக்கியர்களின் மீதான வன்முறைகளும், வேண்டுமென நிகழ்த்தப்பட்ட படுகொலைகளும்தான் மிச்சம்.

அதுமட்டும் இன்றி காங்கிரஸ் கட்சியால் காஷ்மீரில் கொண்டுவரப்பட்ட சட்டதிட்டங்கள் அனைத்தும் காஷ்மீரில் வாழும் பண்டிதர்களுக்கு எதிராகவே இருந்து வந்திருக்கிறது. அதன் விளைவால் காஷ்மீர் பண்டிதர்கள், தங்கள் கூடியிருப்பைக் காலி செய்த நிகழ்வும் இங்கு அரங்கேறியதுள்ளது. இதற்கு காஷ்மீரில் நடைபெற்ற அப்துல்லா மற்றும் முஃப்தி குடும்பத்தினரின் ஆட்சியும் காரணம் என்று காட்டமாக தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், 'தற்போது ஜம்மு-காஷ்மீரில் முதல்கட்ட வாக்குப்பதிவில் மக்கள் முன்வந்து வாக்களித்ததற்கு மகிழ்ச்சி. அதைப்போல் நடக்கவிருக்கும் பலகட்ட வாக்குப்பதிவுகளில் மக்கள் பாஜகவிற்கு வாக்களித்தால் அதன்பின் மீண்டும் நடக்கும் இந்த சவுகிதாரின் ஆட்சியில் காஷ்மீர் பண்டிதர்கள் அச்சமில்லாமல், அவர்கள் இடத்தில் அமைதியாக வாழ எங்கள் ஆட்சி உறுதுணையாக இருக்கும்.

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு குடியேறும் அனைத்து மக்களுக்கும் இந்திய குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் கூறினார்.

Last Updated : Apr 15, 2019, 3:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details