தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

தேர்தல் விதிமீறல்: சரத்குமார் மீது வழக்குப்பதிவு! - politics

தேனி: தேர்தல் விதிமீறலில் ஈடுப்பட்டதாக நடிகர் சரத்குமார் மீது போடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சரத்குமார்

By

Published : Apr 11, 2019, 9:47 PM IST

அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் நேற்று தேனி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக ஆண்டிபட்டியில் சட்டமன்ற வேட்பாளர் லோகிராஜன் மற்றும் தேனியில் பெரியகுளம் சட்டமன்ற வேட்பாளர் மயில்வேல் மற்றும் தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் ஆகியோர்களுக்கு ஆதரவாக வேனில் நின்றபடி பரப்புரை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பழனிசெட்டிபட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், தேவாரம், சங்கராபுரம் மற்றும் சிலமலை உள்ளிட்ட இடங்களில் பரப்புரை செய்துவிட்டு, இறுதியாக போடியில் நிறைவு செய்வதாக திட்டமிடப்பட்டு இரவு 9.50 மணிக்கு மேல் போடிக்கு வந்தார். அங்கு தேவர் சிலை அருகே அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமாருடன் தனது பரப்புரையை தொடங்கிய சரத்குமார், 10 மணிக்கு மேலும் பரப்புரை செய்தார். தேர்தல் நடத்தை விதிமுறையின்படி இரவு 10 மணிக்கு மேல் பரப்புரை செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், போடி காவல் நிலையத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details