தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

நான் ஸ்டாலினின் கொடுக்கு! அன்புமணிக்கு உதயநிதி பதிலடி - உதயநிதி

திருவாரூர்: நான் ஸ்டாலினின் கொடுக்கு தான், இந்த கொடுக்கு கொட்ட கொட்ட வலிக்கும் என திருவாரூர் பரப்புரையில் அன்புமணிக்கு உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.

நான் ஸ்டாலினின் கொடுக்கு - அன்புமணிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

By

Published : Apr 9, 2019, 6:08 PM IST

மக்களவை மற்றும் இடைத்தேர்தலை முன்னிட்டு திருவாரூர் நகர பகுதியான வாலவாய்க்காலில் திமுக சார்பில் திருவாரூர் சட்டப்பேரவை வேட்பாளராக போட்டியிடும் பூண்டி கலைவாணன், கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மக்களவை வேட்பாளர் செல்வராசு ஆகியோருக்கு வாக்கு கேட்டும் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, 'ராகுல் காந்தியின் தேர்தல் அறிக்கைதான் இந்தத் தேர்தலின் ஹீரோ. அதற்கு வில்லன் மோடி. ஒரு வில்லன் இருந்தால் இரண்டு கைக்கூலிகள் இருப்பார்கள் அந்த கைக்கூலிகள்தான் ஓபிஎஸ்-இபிஎஸ்.

நான் ஸ்டாலினின் கொடுக்குதான். நான் கொட்ட கொட்ட வலிக்கும். இம்முறை திமுகவை வெற்றிபெறச் செய்தால், மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். கருணாநிதி இப்போதும் இந்தத் தொகுதியில் போட்டியிடுவதாக நினைத்துக் கொண்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திருவாரூர் சட்டப்பேரவை வேட்பாளர் பூண்டி கலைவாணனை வெற்றிபெறச் செய்ய வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

நான் ஸ்டாலினின் கொடுக்கு - அன்புமணிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

ABOUT THE AUTHOR

...view details