தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

'தலைவர் ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம்'- உதயநிதி ஸ்டாலின் - kancheepuram dmk candidate

காஞ்சிபுரம்: இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து தலைவர் கலைஞரின் பிறந்த நாள் பரிசாக தளபதிக்கு முதலமைச்சர் பதவியை அளிப்போம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் உதயநிதிஸ்டாலின் பரப்புரை

By

Published : Apr 14, 2019, 9:50 PM IST

17 வது மக்களவை தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரப்புரை சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் தலைவர்கள் தங்கள் பகுதிகளில் தங்களுக்கு ஆதரவு கோரி பரப்புரை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் திமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வம் என்பவரை ஆதரித்து முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் செங்கல்பட்டு வாலாஜாபாத் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரப்புரையில் ஈடுப்பட்டார்.

அப்போது பேசிய உதயநிதி, மோடி ஆட்சி மோசமானது, இதனால் பலதரப்பு மக்கள் பாதிப்புள்ளாகி தற்போது மோடிக்கு எதிராக திரும்பி உள்ள நிலையை சாதகமாக்கிக் நமது திமுக கூட்டணிக்கு மக்கள் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

வருகின்ற ஜூன் 3ஆம் தேதி நமது தலைவர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் நமது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமச்சர் ஆக்க வேண்டும். என பொதுமக்களிடையே அவர் கேட்டுக்கொண்டார்.

'கலைஞர் பிறந்த நாளுக்கு தலைவர் ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம்'- உதயநிதி ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details