தமிழ்நாட்டில் வருகிற 18ஆம் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தற்போது வாக்குப்பதிவு நெருங்கிவதையொட்டி அரசியல் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இதேபோல் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான ரவீந்திரநாத் தேனூர், சமயநல்லூர், பொதும்பு, அதலை உள்ளிட்ட பகுதிகளில் தனது இறுதிகட்ட தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.
தேனி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் இறுதிக்கட்ட பரப்புரை - ரவீந்திரநாத்
மதுரை: தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சமயநல்லூர், தேனூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் இறுதிகட்ட பரப்புரை மேற்கொண்டார்.
இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டுச் சென்ற அவர் ஆங்காங்கே பொதுமக்களிடம் தொகுதிக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை கேட்டறிந்து அதை மனுவாக பெற்றுக் கொணடார். மேலும் தேர்தலில் வெற்றிப் பெற்றபின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்தார்.
மேலும் நாட்டிலேயே முதன்மை தொகுதியாக தேனி தொகுதியை மாற்றுவேன் என்றும், தேனூர் பகுதியில் செல்லும் வைகை ஆற்றங்கரையில் அமர்த்து குளிப்பதற்கு படிக்கட்டுகள், தொட்டி அமைக்கப்படும் என்றும், ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு இலவச கழிப்பிட கட்டடம் கட்டி தரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.