திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதலாவது வாக்கு இயந்திரத்தில் 1 முதல் 16 வரை சின்னங்களும், இரண்டாவது இயந்திரத்தில் அமமுக உள்ளிட்ட கட்சிகளின் சின்னம் இடம்பெற்றது. ஆனால் இரண்டாவது இயந்திரத்தில் முதலாவதாக அமமுக சின்னம் இடம்பெறாததால், தங்களது சின்னத்திற்கு வரவேண்டிய வாக்குகள் அனைத்தும் அதிமுகவிற்கு சென்றுவிட்டதாக கூறி அதன் வேட்பாளர் தேர்தல் அலுவலர்களிடம் காலை முதல் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த சாருபாலா தொண்டைமான் வாக்குச் சாவடிக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சமாதான பேச்சில் ஈடுபட்டனர்.
திருச்சி தொகுதி அமமுக வேட்பாளர் வாக்குச்சாவடியில் தர்ணா - தர்ணா
திருச்சி: அமமுக வேட்பாளர் பெயர் இடம்பெற்ற வாக்கு இயந்திரம் இடமாற்றப்பட்டதால், தனக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் மாறிவிட்டன என அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் வாக்குச்சாவடிக்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
திருச்சி தொகுதி அமமுக வேட்பாளர்
இதனால் அந்த வாக்குச்சாவடியில் சுமார் 40 நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. தவறை சரிசெய்வதாக அலுவலர்கள் கூறியதையடுத்து தர்ணாவை கைவிட்டு அவர் கலைந்து சென்றனர்.