கிருஷ்ணகிரி மாவட்டம், சித்தகம் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பெண்கள் அனைவரும் அதிமுகவிற்குதான் வாக்களித்ததாக கூறுகின்றனர். இதை கேட்கும் போது மகிழ்ச்சியாகவுள்ளது என்றார்.
வருமான வரித்துறை பாரபட்சமின்றி செயல்படுகிறது- தம்பிதுரை - பாரபட்சமின்றி செயல்படுகிறது
கிருஷ்ணகிரி: எந்தவித பாரபட்சமும் இன்றிதான் வருமானவரித்துறை செயல்படுவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தம்பிதுரை
இதைதொடர்ந்து எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வீடுகளில் வருமானவரித்துறை உள்நோக்கத்துடன்தான் சோதனை நடத்துவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றார்களே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் வீட்டிலேயே கடந்த வாரம் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், வருமான வரித்துறை எந்தவித பாரபட்சமும் இன்றிதான் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.