தேனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மோடி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் நேற்று மதுரை விமான நிலையம் வந்த அவரை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதிமுக சார்பில் இடைத்தேர்தல் பரப்புரை இன்று தொடக்கம்- ஓபிஎஸ் - obs
மதுரை: இன்று முதல் இடைத்தேர்தலுக்கான பரப்புரை தொடங்கும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்
பின்னர் இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது, ”மக்களவைத் தொகுதிகள் நாற்பதிலும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுக கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் அனைத்து கட்சிகளும் மண்ணை கவ்வுவது உறுதி. மேலுல் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பரப்புரை இன்று தொடங்குகிறது” என்றார்.