தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது. அனைத்துத் தொகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.
மணக்கோலம் பூண்ட வாக்குச்சாவடிகள்...!
திருவள்ளூர்: பூந்தமல்லி மக்களவைத் தொகுதியில் புதுமணத் தம்பதி மணக்கோலத்தில் வந்து வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
மணக்கோலத்தில் வந்து வாக்களித்த புதுமண தம்பதிகள்!
இந்நிலையில் பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பாரிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் புதியதாக திருமணமான விஸ்வநாதன் மற்றும் ஹரிப்பிரியா தம்பதியர் மணக்கோலத்தில் வந்து வாக்களித்தனர். இவர்களின் இந்தச் செயலை வாக்குச்சாவடியில் இருந்தவர்கள் வியந்து பார்த்தனர்.
இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் இன்று திருமணமான கையோடு வந்த புதுமணத் தம்பதிகள் தங்களது ஜனநாயகக் கடைமையை ஆற்றினர்.
Last Updated : Apr 18, 2019, 5:44 PM IST