தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

'பூஜ்ஜியத்திற்கு உள்ளே ராஜ்ஜியம் நடத்துபவர் மு.க.ஸ்டாலின்" - பொன்.ராதா விமர்சனம் - பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி: 'பூஜ்ஜியத்திற்கு உள்ளே  ஒரு ராஜ்ஜியம்' என வாழ்ந்து வரும் ஸ்டாலினுக்கு பாஜக சதம் அடித்திருப்பது தெரியாது' என பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

'பூஜ்ஜியத்திற்கு உள்ளே ராஜ்ஜியம் நடத்துபவர் மு.க.ஸ்டாலின்" - பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்

By

Published : Apr 9, 2019, 9:04 PM IST

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரையில் ஈடுபட்டு வரும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "ஆட்சியை மீண்டும் பிடிக்கும் கட்சி எவ்வளவு பொறுப்போடு ஒரு தேர்தல் அறிக்கையை கொடுக்க முடியுமோ, அந்த வகையில் சிறப்பான தேர்தல் அறிக்கையை பாஜக கொடுத்துள்ளதுள்ளது.

விவசாயிகள், தொழில் முனைவோர் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தேர்தல் அறிக்கை உள்ளதாகக் கூறிய அவர், எட்டு வழிச்சாலை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சிந்தித்து முடிவெடுக்கும் என்றார்.

பா.ஜ.க தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் பூஜ்ஜியம் என கூறியதன் அர்த்தம் தனக்கு புரியவில்லை எனக் கூறிய அவர், ஸ்டாலின் பூஜ்ஜியத்திற்கு உள்ளே ஒரு ராஜ்ஜியம் நடத்தி வாழ்ந்து வருவதாகவும், வெளியே வந்து பார்த்தால்தான் பா.ஜ.க சதம் அடித்திருப்பது தெரியும் என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details