தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

காங்., வசந்தகுமார் பொய் பிரச்சாரம் செய்வது சரியல்ல! பொன்னார் கண்டனம் - பாஜக

கன்னியாகுமரி: மத சார்பற்ற கூட்டணி என்று தெரிவித்து விட்டு காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் செல்லும் இடங்களில் எல்லாம் மத கலவரத்தை தூண்டும் வகையில் பரப்புரைச் செய்து வருவதாக பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொன் ராதாகிருஷ்ணன்

By

Published : Apr 13, 2019, 10:24 PM IST

காங்., வேட்பாளர் வசந்தகுமார் தேர்தல் பரப்புரை தொடர்பாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலக பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளதாவது :

’மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பெருகும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இதுவரை 99,952 நபர்களுக்கு, நமது மாவட்டத்தில் வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இவர்களுடைய ஊதியம் காங்., ஆட்சிக் காலத்தில் ரூ.163 ஆக இருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் ரூ.229ஆக தினக் கூலி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், 100 நாள் வேலை உறுதி திட்டம் 150 நாளாக உயர்த்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைகளை வேண்டுமென்றே மறைத்து காங்., வேட்பாளர் வசந்தகுமார், மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ரத்து செய்யப்படும் என்ற பொய் செய்தியைத் தொடர்ந்து கிராமங்களில் பரப்பி வருகிறார். இந்த பொய்யுரைகளை நமது மாவட்ட மக்கள் நம்பமாட்டார்கள். எனினும் இது குறித்த உண்மையை நமது மக்களுக்குச் சொல்வதை எனது கடமையாகக் கருதுகிறேன்.

மதச் சார்பற்ற கூட்டணி என்று தெரிவித்து விட்டு, காங்., வேட்பாளர் வசந்தகுமார் செல்லும் இடங்களில் எல்லாம் மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பரப்புரை செய்து வருவதை அனைவரும் அறிவர். அதுமட்டுமல்லாமல், மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தனது நிறுவன பொருட்கள் மூலம் பணத்தைக் கொடுப்பதாகச் செய்திகள் வருகின்றன. படிப்பறிவு உள்ள நமது மாவட்ட மக்களின் வாக்குகளை எவராலும் விலை கொடுத்து வாங்கிட முடியாது என்பதைக் கூடிய விரைவில் காங்., வேட்பாளர் வசந்தகுமார் உணர்ந்து கொள்வார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details