தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

'தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள வேண்டும்... ராகுல் கூறிய கருத்துக்கு நான்தான் காரணம்!' - ராகுல்காந்தி கருத்து

சென்னை: தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள வேண்டும் என ராகுல்காந்தி கூறுவதற்கு காரணம் தான்தான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்

By

Published : Apr 14, 2019, 8:26 AM IST


வடசென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான காளியம்மாள், மெர்லின் சுகந்தி ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தனர். திமுக பொருளாளர் வீட்டில் மட்டும்தான் பணம் இருந்ததா? மற்ற கட்சி வேட்பாளர்கள் வீட்டில் பணம் இல்லையா? தேர்தல் ஆணையம் ஏன் மற்ற இடங்களில் சோதனை நடத்தவில்லை.

சீமான்

மேலும் தேர்தல் ஆணையம் என்பது ஒரு நாடக நிறுவனம் ஆகும். இந்த ஐந்தாண்டுகள் எதுவும் செய்ய முடியாத பாஜக அரசு, அடுத்த ஆட்சிக்கு வந்தால் செய்து விடுமா? காங்கிரசும் இதற்கு விதிவிலக்கல்ல.

ராகுல் காந்தி வட இந்தியாவிலும் போட்டியிடுவார்-வயநாட்டிலும் போட்டியிடுவார். தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும் என்று ராகுல் காந்தி பேசுவதற்கு காரணம் நான்தான். இவ்வாறு அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details