தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

இந்தியர்களின் மதிப்பை உயர்த்தியவர் மோடி - சரத்குமார் புகழாரம் - praises

ராமநாதபுரம்: இந்தியர்களின் மதிப்பு 20 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட மிகப்பெரிய அளவில் உயர்ந்திருப்பதற்கு காரணம் பிரதமர் மோடி என சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியர்களின் மதிப்பை உயர்த்தியவர் மோடி - சரத்குமார் புகழாரம்

By

Published : Apr 12, 2019, 12:02 AM IST

ராமநாதபுரம் மக்களவைத்தொகுதியில் அதிமுக கூட்டணி பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தை மாநிலத்தில் திமுகவும், மத்தியில் காங்கிரஸ் கட்சியும் வஞ்சித்தது.

கச்சத்தீவை தாரை வார்த்தது, இலங்கை தமிழர்கள் படுகொலை உள்ளிட்டவை திமுக ஆட்சியின் போதுதான் நடைபெற்றது. தற்போது, யாழ்பாணத்தில் தமிழர்களுக்காக 13 ஆயிரம் வீடுகள், மருத்துவ உதவிகள் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்தவர் மோடி.

சமீபத்தில் காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நிகழ்ந்த தாக்குதலில் 48 துணை ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு பதில் தாக்குதலை உடனடியாக கொடுத்து நாட்டின் பாதுகாப்பை நிலைநாட்டியவர் மோடி.

இந்தியர்களின் மதிப்பு 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. இதற்கு மோடி தலைமையிலான ஆட்சிதான் காரணம். மத்தியில் வலிமையான ஆட்சி அமைய மோடியை ஆதரிக்க வேண்டும் எனப் பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details