தருமபுரில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடத்தூர் பேருந்து நிலையம் அருகே திண்டுக்கல் லியோனி இன்று பரப்புரை மேற்கொண்டார்.
அன்புமணி போல் பேசி அசத்திய திண்டுக்கல் லியோனி! - election
தருமபுரி: அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் மக்களை சந்திக்க முடியாமல் அன்புமணி ராமதாஸ் திணறுவதாக திண்டுக்கல் லியோனி கேலி செய்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அன்புமணியால் மக்களை சந்திக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி ஆட்சி குறித்து ஒரு புத்தகமே வெளியிட்டு எடப்பாடி பதவியில் இருந்து நீக்கக்கோரி ஆளுநரிடம் மனு கொடுத்தார்.
அதிமுக கூட்டணியில் சேர்ந்த பிறகு அவர்களால் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கூட பதிலளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்” என்று அன்புமணி போல் பேசி நடித்து சிரிப்பலையை ஏற்படுத்தினார்.