தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

துரைமுருகன் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் திருப்பம்!

வேலூர்: திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கனரா வங்கி மேலாளர் தயாநிதி வீட்டில் வருமானவரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தியுள்ளனர்.

துரைமுருகன் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் திருப்பம்!

By

Published : Apr 11, 2019, 11:48 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள கனரா வங்கியில் மேலாளராக இருப்பவர் தயாநிதி. இவரது வீடு காந்தி நகர் 2வது குறுக்கு தெருவில் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு திடீரென தயாநிதி வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில், பொதுவாக அரசியல் கட்சித் தலைவர்கள் அல்லது தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீட்டில்தான் இதுபோன்று ஐடி ரெய்டு நடைபெறுவது வழக்கம்.

வங்கி அலுவலர்களை பொருத்தவரை வருமான வரியை முறையாக செலுத்திவிடுவார்கள் அதாவது அவர்களது சம்பளத்திலிருந்து அரசு சார்பில் வருமான வரி பிடித்தம் செய்யப்படும். இந்த சூழ்நிலையில் வங்கி மேலாளர் வீட்டில் ஏன் சோதனை என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக பொருளாளர் துரைமுருகன், அவரின் நெருங்கிய நண்பர் சீனிவாசன், அவரது சகோதரி விஜயா ஆகியோர் வீட்டில் கடந்த வாரம் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது விஜயா வீட்டில் ரூபாய் 11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அந்த பணத்தில் காட்பாடி காந்தி நகர் கனரா வங்கி கிளையின் சீரியல் நம்பர் இருந்ததால் அந்த வங்கியின் மேலாளரான தயாநிதி வீட்டில் சோதனை நடத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details