புதுக்கோட்டை மாவட்டம், ராயவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவர் துபாயில் உணவகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக துபாயில் இருந்து வந்து வாக்களித்துள்ளது அந்தப் பகுதியினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது:
ரூ.50 ஆயிரம் செலவு செய்து துபாயிலிருந்து வாக்களிக்க வந்த இளைஞர்...! - pudukottai
புதுக்கோட்டை: விடுப்பு தராமல் இருந்திருந்தால் எனக்கு வேலையே வேண்டாம் என திரும்பி வந்திருப்பேன் என வெளிநாட்டில் இருந்து வந்து ஜனநாயகக் கடமை ஆற்றிய இளைஞர் தெரிவித்துள்ளார்.
ஹரிபிரசாத்.
எனது பெயர் ஹரிபிரசாத். நான் துபாய் நாட்டில் உணவகம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன். இது எனக்கு இரண்டாவது தேர்தல் என்பதால் 15 நாட்கள் விடுமுறையில் வாக்களிக்க வந்துள்ளேன். இதற்காக ரூ. 50 ஆயிரம் செலவு செய்துள்ளேன்.
ஜனநாயகக் கடமையை ஆற்ற எவ்வளவு தூரமானாலும், செலவானாலும் என் ஜனநாயக உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது. வாக்களிக்க விடுமுறை தரவில்லை என்றால் எனது பணியை துறக்கவும் தயாராக இருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
Last Updated : Apr 18, 2019, 12:18 PM IST