சென்னையில் உள்ள 3,770 வாக்குச் சாவடிகளில், மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபடும் 20 ஆயிரம் அரசு ஊழியர்கள், 16 ஆயிரம் காவல்துறையினர் என மொத்தம் 36 ஆயிரம் பேர் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்கவுள்ளனர்.
அவர்களுக்கான இரண்டு கட்ட தேர்தல் பயிற்சிகள், 16 பயிற்சி மையங்களிலும் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியில் பங்கேற்றுவரும், தேர்தல் பணியாளர்களுக்கு (அரசு ஊழியர்கள், காவல்துறை அடக்கம்) தபால் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு முதற்கட்ட தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள், காவல் அலுவலர்களுக்கான முதற்கட்ட தபால் வாக்குப்பதிவு இன்று வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில், 2,323 காவலர்களும், காவல் அலுவலர்களும் வாக்களித்து வருகின்றனர்.