தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

வாக்கெடுப்புக்கு தயாராகும் தஞ்சை மாவட்டம்

தஞ்சை: நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களுக்காக வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்கெடுப்புக்கு தயாராகும் தஞ்சை மாவட்டம்

By

Published : Apr 17, 2019, 5:34 PM IST


தஞ்சையில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு பதிவு இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பேராவூரணி திருவையாறு தஞ்சாவூர் மற்றும் மன்னார்குடி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதியை கொண்டது.

வாக்கெடுப்புக்கு தயாராகும் தஞ்சை மாவட்டம்

மொத்தம் 2290 வாக்குச்சாவடிகளில் 102 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மொத்த ஆண் வாக்காளர்கள் 703967, பெண் வாக்காளர்கள் 739314, இதர வாக்காளர் 97 என மொத்தம் 14,43,378 வாக்காளர்கள் உள்ளனர்.

நாடாளுமன்ற தொகுதியில் 2062 போலீசார், 1334 முன்னாள் ராணுவத்தினரும் 480 ஓய்வு பெற்ற போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 3 ஆயிரத்து 876 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு மையங்களில் 11781 அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என தெரிவிக்கும் இயந்திரம் ஆகியவற்றை காவல்துறையினர், அலுவலக ஊழியர்கள் ஆகியோர் சேர்ந்து அந்தந்த வாக்குசாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details