தமிழ்நாட்டில் நாளை மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி பெரம்பலூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஸ்கேட்டிங் செய்து மாணவர்கள் வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணி - வாக்குபதிவு விழிப்புணர்வு பேரணி
பெரம்பலூர்: நாளை நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி ஸ்கேட்டிங் செய்து மாணவர்கள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
election-awarness-scatting-rally
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் ஸ்கேட்டிங் மூலமாகவே நூறு விழுக்காடு வாக்குப்பதிவவை வலியுறுத்தி பேரணி நடத்தினர். இப்பேரணியை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணிய ராஜா தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் 50க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.