ஐயப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் அதிமுக 38வது வட்ட பொறுப்பாளராக உள்ளார். தென்றல் நகர் கூட்டுறவு சங்கத் தலைவராக சில மாதங்களுக்கு முன் பதவி ஏற்ற இவருக்கும் கே.சாத்தனூரைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியான ராமலிங்கம் என்பவருக்கும் இடையே கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவினர் மீது அமமுகவினர் தாக்குதல் - அமமுகவினர்
திருச்சி: திருச்சியில் அதிமுகவினர் மீது அமமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சாத்தனூர் பகுதியில் இன்று கந்தசாமி தனது ஆதரவாளர்களுடன் சென்று தேமுதிக வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்துள்ளார். அப்போது, அங்கு வந்த ராமலிங்கத்தின் ஆதரவாளர்கள் கந்தசாமியையும், அவரது ஆதரவாளர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
கட்டை, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கியதால் படுகாயமடைந்த இவர்களை தனியார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.