அப்போது அவர் பேசுகையில், “விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்து உள்ளனர். ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டப்படும் என்றும் சபரிமலை கோயிலில் கலாச்சாரம் காக்க உச்சநீதிமன்ற தீர்ப்பை சட்டப்பூர்வமாக எதிர் கொள்வோம். நீர் மேலாண்மைக்காக தனி அமைச்சகம் உருவாக்க உள்ளனர். தமிழகம் போன்ற மாநிலங்களில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். முத்ரா வங்கி கடன் திட்டம் மேலும் மேம்படுத்தப்படும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மேலும் வலுவூட்டும் விதமாக திட்டத்தை மேம்படுத்த உள்ளோம்.
சிறு குறு தொழிலாளர்கள் நலன் பெற பல்வேறு திட்டங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. விவசாயிகளின் லாபம் இரட்டிப்பாக்கப்படும் என்பது தேர்தல் அறிக்கையில் மட்டுமே கூறுகின்றனர். நடைமுறையில் இல்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு விவசாய கடன் ரூ.11 லட்சம் கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளது. விலையை இரட்டிப்பாக்க கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும், தற்போது அதை மேம்படுத்தி வருகிறோம், எனவே விலை இரட்டிப்பு என்பது சாத்தியமே. தமிழகத்தில் நீர் மேலாண்மை இல்லை, தொழில்நுட்ப உதவியுடன் நீர் மேலாண்மையை வலுப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நிலைபாடு.