கொங்கு மண்டலத்தில் சில அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். மேலும், மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
கொங்கு மண்டலத்தை சேர்ந்த சில அமைப்பினர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு - eps
சேலம்: கொங்கு மண்டலத்தின் சில அமைப்பைச் சேர்ந்த தொழிலதிபர்கள், அமைப்பின் நிர்வாகிகள் முதலமைச்சரை நேரில் சந்தித்து அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இவர்களுடன், தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு பருத்தி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளும் முதலமைச்சரை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, அதிமுக தலைமையிலான கூட்டணி அறிவித்துள்ள தேர்தல் அறிக்கையில், நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் தந்துள்ளதால் அதனை தாங்கள் வரவேற்பதாகத் தெரிவித்தனர்.