திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் ஜோதிமணியை ஆதரித்து ஒட்டன்சத்திரம் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, 'முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை வைத்துக்கொண்டு ஓபிஎஸும், ஈபிஎஸும் நாடகமாடிவருகின்றனர். இவர்களுக்கு இந்தத் தேர்தல் மூலம் வாக்காளர்கள் உகந்த பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.
ஜெ. படத்தை வைத்துக்கொண்டு நாடகமாடும் ஓபிஎஸும், ஈபிஎஸும்...! நடிகர் ஜெயமணி - நாடகம்
திண்டுக்கல் : ஜெயலலிதா படத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு ஓபிஎஸும், ஈபிஎஸும் நாடகமாடி வருவதாக நகைச்சுவை நடிகர் ஜெயமணி குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் ஜெயமணி
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டை மட்டுமல்லாமல் தமிழ்நாடு உரிமைகளையும் அடகு வைத்துள்ளார்கள். மே மாதம் 23ஆம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வரும். தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் இருவருக்கும் தகுந்த பாடம் கற்றுக்கொடுக்கப்படும்' என அவர் தெரிவித்தார்.