தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

தேர்தல் பாதுகாப்பிற்காக ஆயுதப்படை வீரர்கள் வருகை - சத்யபிரதா சாஹூ - sathya pratha sahoo

சென்னை: தேர்தல் பாதுகாப்பிற்காக 160 ஆயுதப்படை வீரர்களை அனுப்ப இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளாதாக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சத்ய பிரதா சாஹூ

By

Published : Apr 5, 2019, 6:09 PM IST

இதுதொடர்பாக இன்று தலைமை தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர், “தமிழ்நாட்டில் பணம் கொண்டு செல்லப்படுவது குறித்து தீவிர சோதனைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தற்போதுவரை ரூ.127 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தை பொறுத்தவரை 520 கிலோவும், வெள்ளி 421 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் தேர்தல் பாதுகாப்பிற்காக 160 ஆயுதப்படை (CAPF - Central Armed Police Force) வீரர்களை அனுப்பிடதலைமை தேர்தல் ஆணையம் ஒப்புதல் கொடுத்துள்ளது. மேலும், தேர்தல் பணிக்காக 3.5 லட்சம் அதிகாரிகள் மற்றும் 3000 போலீசார் அமர்த்தப்பட்டுள்ளனர். 90 ஆயிரம் இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளது” என அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details