தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

'சட்டப்பேரவையில் குரல் கொடுக்காத ரங்கசாமி தேர்தலுக்காக காங்கிரசை குறை கூறுகிறார்' - legislative assembly,

புதுச்சேரி: கடந்த மூன்று ஆண்டுகளில் மக்கள் பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் குரல் கொடுக்காத எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி தற்போது தேர்தல் வந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சியை குறை கூறிவருகிறார் என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம் குற்றம்சாட்டியுள்ளார்.

நமச்சிவாயம்

By

Published : Apr 11, 2019, 8:39 AM IST

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வைத்திலிங்கத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் நமச்சிவாயம் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டார். ஆனால் தற்போது மீண்டும் அதே வாக்குறுதிகளை கொடுத்துவருகிறார்.

சட்டமன்றத்தில் குரல் கொடுக்காத ரங்கசாமி தேர்தலுக்காக காங்கிரசை குறை கூறுகிறார்- நமச்சிவாயம்

ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய அவர், தற்போது மக்களவைத் தேர்தலுக்காக அளித்துவரும் வாக்குறுதிகளை மட்டும் எப்படி நிறைவேற்றுவார் என மக்கள் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து என்ஆர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றது. ஆனால் இதுவரை புதுச்சேரி வளர்ச்சி குறித்து நரேந்திர மோடியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி பேசியது இல்லை.

மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவேன் என்ற வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றத் தவறிவிட்டனர். மீண்டும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவேன் என்று கூறிவருவது ஏமாற்று வேலை. எதிர்க்கட்சித் தலைவரான பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் ரங்கசாமி, மக்கள் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் இதுவரை குரல் எழுப்பவில்லை.

அதோடு மட்டுமல்லாமல் மக்களுக்காக எந்தவித போராட்டம் நடத்தவில்லை. ஆனால் தற்போது தேர்தல் வந்ததையொட்டி மக்களை சந்தித்து காங்கிரஸ் அரசு குறித்து குறைகளைக் கூறிவருகிறார். இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details