தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

பள்ளியில் தேர்தல் ஒப்புகை சீட்டு கண்டெடுப்பு - சீட்டு

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் நெல்லூரில் தேர்தல் ஒப்புகை சீட்டுக்கள் பள்ளி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் தேர்தல் ஒப்புகை சீட்டு கண்டெடுப்பு

By

Published : Apr 15, 2019, 5:27 PM IST

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மைக்கு எதிராக நாடு முழுவதும் புகார் எழுந்துள்ள நிலையில் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் தேர்தல் ஒப்புகை சீட்டுக்கள் பள்ளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நிறுவனத்தின் செய்தியாளரிடம் பள்ளி மாணவர்கள் தேர்தல் ஒப்புகை சீட்டு பள்ளியில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற செய்தியாளர் அதனை சேகரித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், தேர்தலுக்காக வாக்கு இயந்திரத்தை பிரித்து வாக்குசாவடி ரீதியாக ஒதுக்கும் போது இந்த தவறு நடந்திருக்கலாம். வருவாய் கோட்டாட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் பள்ளியில் சோதனை நடத்தி உள்ளார் என்றார்.

ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 11ஆம் தேதி நடந்தது. அப்போது மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details