உத்தரப்பிரதேச மாநிலம், இட்டாவா மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ராம்சங்கர் கதேரியா போட்டியிடுகிறார். இவருக்கு போட்டியாக அவரது மனைவி மிருதுளா கட்டாரியா சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
பாஜக வேட்பாளரான கணவரை எதிர்த்து மனைவி சுயேச்சையாக போட்டி - BJP candidate
லக்னோ: இட்டாவா தொகுதியில் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு எதிராக அவரது மனைவியே களத்தில் குதித்திருப்பது உத்தரப்பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல நாட்களாக இட்டாவா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு சீட் வழங்கவில்லை. இதனால் பாஜகவிற்கு பாடம் புகட்டவே இந்தத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். இதனால் என் கணவர் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இட்டாவா தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக உள்ள அசோக் டேக்ரே, தனக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சமீபத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.