தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

'கருத்துக் கணிப்புகள் பொய்க்க வாய்ப்புள்ளது..!' - வெங்கையா நாயுடு - வெங்கையா நாயுடு

ஹைதராபாத்: 1999 முதல் வெளிவந்த பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் தவறாக இருந்துள்ளதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

venkaiah naidu

By

Published : May 19, 2019, 11:43 PM IST

ஆந்திரா மாநிலம் குண்டூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "கருத்துக் கணிப்புகள் கள நிலவரத்தை பிரதிபலிக்கும் என்ற கட்டாயம் இல்லை. 1999 முதல் வெளிவந்த கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் உண்மையாக இருந்ததில்லை.

அனைத்து கட்சியும் 23ஆம் தேதி வரை நம்பிக்கையுடன் இருப்பார்கள். எனவே 23 தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம். நாட்டுக்கும், மாநிலத்திற்கும் திறமையான தலைவரும், நிலையான அரசும் தேவை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details