17ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று நடைபெற்றுவருகிறது. இதில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தல்: சரத் பவாரின் பேரன் தோல்வி - மாவல் மக்களவைத் தொகுதி
மகாராஷ்டிரா மாநிலம் மாவல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் பேரன் பாரத் பவார் தோல்விடைந்துள்ளார்.
parth pawar
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மாவல் மக்களவைத் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரும், அக்கட்சியின் தலைவர் சரத் பவாரின் பேரனுமான பரத் பவார் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 962 வாக்கு வித்தியாசத்தில், சிவ சேனா வேட்பாளர் ஷிரிரங் அப்பா சந்து பார்னிடம் தோல்விடையடைந்துள்ளார்.
அதேவேளையில், பரத்மதி தொகுதியில் போட்டியிட்ட சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலே ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 824 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் கஞ்சன் ராகுல் கூலை வீழ்த்தியுள்ளார்.