மக்களவைத் தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு பணிகளுக்கான தேர்வு கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் எனத் தன் முகநூல் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
அரசு பணிகளுக்கான தேர்வு கட்டணம் ரத்து - ராகுல் அறிவிப்பு - தேர்வு
டெல்லி: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற்றால் அரசு பணிகளுக்கான தேர்வு கட்டணம் ரத்து செய்யப்படும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
அரசு பணிகளுக்கான தேர்வு கட்டணம் ரத்து - ராகுல் அறிவிப்பு
இந்தியாவிலுள்ள அனைத்து மக்களும் பயன்பெரும் வகையில் "சுகாதாரத்துக்கான உரிமைச் சட்டம்" கொண்டு வருவதற்காக தனிச் சட்டம் இயற்றப்படும் எனவும், ஜிடிபியில் சுகாதாரத்திற்காக 3 விழுக்காடு உயர்த்தப்படும் எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
முன்னதாக, 2020-க்குள் நான்கு லட்சம் மத்திய அரசு பணிகள் நிரப்பப்படும் எனவும், மார்ச் 31, 2019க்குள் பெறப்பட்ட கல்விக்கடனுக்கான வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும் எனவும் ராகுல் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.