ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் திடீரென ஏற்பட்ட பலத்த புயல், மழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இதற்கு இரங்கல் தெரிவிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
திடீர் புயலில் உயிரிழந்தவர்களுக்கு ராஜ்நாத் இரங்கல் - express solidarity
டெல்லி: ராஜஸ்தான், ம.பி, குஜராத் போன்ற வட இந்திய பகுதிகளில் ஏற்பட்ட திடீர் புயல், மழை காரணமாக உயிரிழந்த மக்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராஜ்நாத் இரங்கல்
அப்போது அவர் கூறுகையில், " பலத்த புயல், மழை காரணமாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பலர் உயிரிழந்த செய்தியை கேட்டு மனம் வருந்துகிறேன். அந்த மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய படைகள் தயாராக உள்ளது" என்றார்.
முன்னதாக, மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா புயலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். தேர்தல் சமயத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு தேர்தல் நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது.