சாரதா 100 நிறுவனங்கள் உள்ளடங்கிய பெரிய நிதி நிறுவனமாக மேற்கு வங்கத்தில் இயங்கி வந்தது. இந்நிறுவனத்தில் 18 லட்சம் மக்கள் முதலீடு செய்தனர். இதனைதொடர்ந்து இதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு 2013ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி முதலமைச்சராக இருந்தபோது, மாநில காவல்துறை இந்நிறுவனத்தை முடக்கியது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகக் கூறி சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்தது.
சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கில் குளறுபடி - முன்னாள் கொல்கத்தா காவல் ஆய்வாளர் குற்றச்சாட்டு
டெல்லி: சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கில் பாஜக தலைவர்களுக்கு ஆதரவாக சிபிஐ செயல்படுகிறது என முன்னாள் கொல்கத்தா காவல் ஆய்வாளர் ராஜிவ் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பிறகு, நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகுல் ராய், கைலாஷ் விஜய் வர்கியா ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். இதனைதொடர்ந்து சிபிஐ இவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியது. வழக்கு சிபிஐக்கு மாறுவதற்கு முன்பு அப்போது கொல்கத்தா காவல் ஆய்வாளராக இருந்த ராஜிவ் குமார்தான் இந்த வழக்கை விசாரித்திருந்தார். இந்நிலையில், இவர் பாஜக தலைவர்கள் முகுல் ராய், கைலாஷ் விஜய்வர்கியா ஆகியோருக்கு ஆதரவாக சிபிஐ செயல்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.