தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

கண்பார்வையற்ற வாக்காளர்களுக்கு சிறப்பு வாக்காளர் அட்டை - 2019 ls election

புதுச்சேரி: கண் பார்வையற்றவர்களுக்கு பிரையில் புள்ளிகள் மற்றும் ஒளி புகும் ஸ்டிக்கர் வில்லை அச்சடிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

கண் பார்வையற்றவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கல்

By

Published : Apr 13, 2019, 10:56 PM IST

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 1086 கண்பார்வையற்ற வாக்காளர்கள் உள்ளனர். பரீட்சாத்த முறையில் இன்று 46 பார்வையற்ற வாக்காளர்களுக்கு பிரையில் மொழியுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சியர் அருண் வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பிரையில் புள்ளிகள், ஒளிபுகும் ஸ்டிக்கர்களில் அச்சடிக்கப்பட்டு வாக்காளர் தொட்டு உணரக்கூடிய வகையில் அனைத்து தகவல்களும் அடங்கியுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்தார். மேலும் புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமமும் இன்றி வாக்களிக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்தள வசதிகள், சக்கர நாற்காலிகள் மற்றும் 422 வாக்குச்சாவடிகளுக்கு தலா ஒரு இடத்திற்கும் 2 மாணவர் தன்னார்வலர்களாக, 844 மாணவர் தன்னார்வலர்கள் உதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

கண் பார்வையற்றவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கல்

ABOUT THE AUTHOR

...view details